1
00:00:00,560 --> 00:00:05,000
ஹரப்பா ஃபிலிம்ஸ் வழங்கும்

2
00:00:05,960 --> 00:00:09,320
நாகரிகத்தின் தொட்டில் என்று மெசபடோமியா போற்றப்படுகிறது.

3
00:00:09,480 --> 00:00:12,240
ஆனால், அதே காலகட்டத்தில்தான் தெற்காசியாவிலும் மிகப் பரந்த, புதிரார்ந்த 

4
00:00:12,240 --> 00:00:13,000
ஒரு பேரரசு எழுந்தது.

5
00:00:13,120 --> 00:00:16,920
பிரமிடுகள் கட்டப்பட்டு வந்த அதே வேளையில்

6
00:00:17,080 --> 00:00:23,600
ஒரு நூற்றாண்டுக்கு
முன்பு வரை அதன் மாபெரும் நகரம் மண்ணுக்குள் புதைந்து கிடந்தது.

7
00:00:23,800 --> 00:00:29,800
இன்று, அந்தப் பேரரசின் பாரம்பரியம் 

8
00:00:30,120 --> 00:00:34,400
இந்தியா-பாகிஸ்தானின் அமைதியற்ற எல்லையில் பிளவுண்டு கிடக்கிறது. 

9
00:00:38,240 --> 00:00:43,320
மொகஞ்சோதாரோ: பண்டைய சிந்துவெளி நகரத்தின் புதிர்களை வெளிக்கொணர்தல்

10
00:01:01,400 --> 00:01:05,760
ஸ்தூப மேட்டின் மீது நடந்த அகழ்வாராய்ச்சிகள்: மொகஞ்சோதாரோ.

11
00:01:16,720 --> 00:01:20,320
4,000 ஆண்டுகள் பழமையான
மொகஞ்சோதாரோ நகரின் இடிபாடுகள்

12
00:01:20,440 --> 00:01:22,560
அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது ஒரு வசீகர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

13
00:01:24,160 --> 00:01:27,400
கிராம மக்கள் இந்த இடத்தைப் பற்றி பல கதைகளைச் சொல்கிறார்கள். அவை, உண்மையோ, பொய்யோ தெரியாது. 

14
00:01:29,160 --> 00:01:32,320
ஆனால், அந்தக் கதைகளில் மிகவும் விசித்திரமான ஒன்று ஒரு பண்டைய ஆட்சியாளரைப் பற்றியது.

15
00:01:32,480 --> 00:01:35,560
1. கதை

16
00:01:35,640 --> 00:01:37,520
மொகஞ்சோதாரோவில் மன்னன் ஒருவன் இருந்தான்.

17
00:01:38,320 --> 00:01:41,880
அவன் மிகவும் சக்தி வாய்ந்தவனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தான்

18
00:01:42,120 --> 00:01:43,680
அவனுக்கு காம உணர்வும் அதிகம் இருந்தது.

19
00:01:43,800 --> 00:01:45,640
ஷேக் ஜாவித் அலி சிந்தி
சுற்றுலா வழிகாட்டி
இங்கு திருமணங்கள் நடந்தபோதெல்லாம்

20
00:01:47,040 --> 00:01:50,880
முதலிரவில் மணப்பெண்ணுடன் முதலில் மன்னன் உறங்குவதுதான் வழக்கமாக இருந்தது. 

21
00:01:56,640 --> 00:01:59,240
இது நாளுக்கு நாள்

22
00:01:59,440 --> 00:02:01,160
வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம் 

23
00:02:01,280 --> 00:02:02,440
என ஆண்டுக் கணக்கில் தொடர்ந்தது 

24
00:02:04,240 --> 00:02:08,400
ஒரு நாள், மன்னனின் சகோதரியின்
மகளுக்குத் திருமணம் நடந்தது.

25
00:02:11,000 --> 00:02:15,200
மன்னும் அந்த ஒரு தருணத்திற்காக தன்னைத் தயார்படுத்திக்கொள்ளத் தொடங்கினான்

26
00:02:17,680 --> 00:02:21,360
ஆனால், மணமகளோ பள்ளத்தாக்கின் கடவுள்களும் 
தேவதைகளும் 

27
00:02:21,720 --> 00:02:23,120
தன்னை காப்பாற்ற வேண்டும் என பிரார்த்திக்கத் தொடங்கினாள்.

28
00:02:23,240 --> 00:02:27,920
அரசன் வந்தான். அவனது ஒரு கால் மட்டுமே வீட்டுக்குள் இருந்தது.

29
00:02:28,080 --> 00:02:29,520
மற்றொரு கால் கதவுக்கு வெளியே இருந்தது.

30
00:02:30,040 --> 00:02:33,200
அப்போது, அந்த மணப்பெண்ணின் வேண்டுதலால் 

31
00:02:33,800 --> 00:02:37,160
ஒட்டுமொத்த நகரமும் அழிக்கப்பட்டது.

32
00:02:43,000 --> 00:02:47,360
இந்தக் கதை மெசபடோமியாவுடனான சில கருத்துப் பரிமாற்றங்களின்

33
00:02:47,520 --> 00:02:48,520
விளைவாக உருவாகியுள்ளது.

34
00:02:48,840 --> 00:02:51,600
இதே கதை கில்காமேஷ்
காவியத்திலும் காணப்படுகிறது.

35
00:02:53,840 --> 00:02:56,480
மொகஞ்சோதாரோ 
முத்திரை - சுமார்  பொ.ஆ.மு. 2300

36
00:02:56,560 --> 00:02:58,880
இந்தப் பண்டைய நகரத்தின் மீது
எனக்கு எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது தெரியுமா?

37
00:03:04,640 --> 00:03:08,080
நான் இங்கு முதன் முதலில் 70களின் முற்பகுதியில்

38
00:03:08,080 --> 00:03:09,840
பள்ளிச் சுற்றுலாவுக்காக

39
00:03:09,960 --> 00:03:11,880
இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கப் பள்ளியின் 9ஆம் மாணவர்களுடன் வந்தேன் 

40
00:03:12,680 --> 00:03:15,680
எங்கள் சக வகுப்புத் தோழரும் பிரதமரின் மகனுமான 

41
00:03:15,680 --> 00:03:16,760
ஷா நவாஸ் பூட்டோ தான் எங்களை உபசரித்தார்.

42
00:03:17,040 --> 00:03:20,200
அவருடைய பூர்வீக நிலங்கள் இங்கிருந்து சில மைல்கள் தொலைவில்தான் இருந்தன.

43
00:03:21,760 --> 00:03:25,160
எனது முதல் Kodak Instamatic
கேமராவையும் எடுத்துச் சென்றிருந்தேன்.

44
00:03:28,400 --> 00:03:31,400
என் நினைவில் இருப்பது இங்கு வசித்துவந்த மக்கள் சற்றுமுன்புதான் 

45
00:03:31,560 --> 00:03:34,960
அங்கிருந்து சென்றதுபோல  தோன்றிய வெறிச்சோடிய தெருக்கள்தான் 

46
00:03:39,040 --> 00:03:40,440
நெடுங்காலமாக மறக்கப்பட்ட ஒரு
நாகரிகத்தின் மீதான முதல் ஒளி:

47
00:03:40,520 --> 00:03:41,720
இந்தியாவில் வரலாற்றுக்கு
முந்தைய அறியப்படாத காலம் குறித்த 

48
00:03:41,720 --> 00:03:42,240
புதிய கண்டுபிடிப்புகள்.

49
00:03:42,320 --> 00:03:43,680
அந்த மக்கள் யார்?

50
00:03:46,840 --> 00:03:49,280
பண்டைய இந்தியாவில் "நவீன" நுட்பங்கள்:

51
00:03:49,400 --> 00:03:51,360
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு
முந்தைய இனத்தின் கலைகளும்

52
00:03:51,360 --> 00:03:51,960
கைவினைப் பொருட்களும்.

53
00:03:52,080 --> 00:03:55,480
பண்டைய எகிப்து, மெசபடோமியா
மற்றும் சீனாவின் காலகட்டத்தில்,

54
00:03:55,920 --> 00:03:59,200
இந்த மூன்று நாகரிகங்களையும் ஒன்று சேர்த்தால் இருப்பதை விட ஒரு
பெரிய நாகரிகம் 

55
00:03:59,320 --> 00:04:01,000
பண்டைய சிந்து சமவெளியில்  உருவானது.

56
00:04:01,920 --> 00:04:05,520
மொகஞ்சோதாரோவும் ஹரப்பாவும் தான்
அதன் முதல் நகரங்கள்.

57
00:04:06,200 --> 00:04:09,040
மொகஞ்சோதாரோ மிகவும் பிரமிக்க வைக்கிறது

58
00:04:09,400 --> 00:04:12,600
கண்டறியப்படாத எழுத்துகளைக் கொண்ட பாதி முத்திரைகள் இங்கிருந்துதான் கிடைத்துள்ளன; 

59
00:04:13,600 --> 00:04:15,000
இதுதான் முதன்மையான நகரம். 

60
00:04:18,520 --> 00:04:20,680
ஆனால், ஹரப்பாதான் நான் சென்ற முதல் சிந்து நகரம்.

61
00:04:22,520 --> 00:04:25,120
என் சிறு வயதில் பலமுறை
அங்கு சென்றிருக்கிறேன்.

62
00:04:27,560 --> 00:04:29,640
எனக்கு மிகவும் பிடித்த எனது பெரிய மாமா ஹஃபீஸும் அத்தை சமியாவும் 

63
00:04:29,720 --> 00:04:32,760
அங்கிருந்து  சில மைல்கள்
தொலைவில்தான் வாழ்ந்து வந்தனர்.

64
00:04:34,520 --> 00:04:38,000
இந்த இடிபாடுகளின் அமைதி என்னையும்
ஆட்கொண்டது

65
00:04:38,000 --> 00:04:39,760
ஆனால் என் குழந்தைப்
பருவத்துடனேயே அதுவும் மறைந்து போனது.

66
00:04:42,040 --> 00:04:46,600
1995-இல் பாகிஸ்தானிலிருந்து சான்
பிரான்சிஸ்கோவிற்குக் குடிபெயர்ந்த பிறகு,

67
00:04:46,960 --> 00:04:48,800
நான் ஒரு வலைத்தளத்தை
உருவாக்க விரும்பினேன்.

68
00:04:49,320 --> 00:04:52,120
குழந்தையாக இருந்தபோது அந்த இடிபாடுகளை
எவ்வளவு நேசித்தேன் என்பது

69
00:04:52,120 --> 00:04:53,120
என் நினைவுக்கு வந்தது.

70
00:04:53,240 --> 00:04:57,120
எனவே harappa.com என்பதை
வலைத்தளத்தின் பெயராகத் தேர்வு செய்தேன்.

71
00:04:57,800 --> 00:05:00,400
இந்தப் புதிய உலகத்தின் மத்தியில் ஹரப்பா என்ற சொல்லின் பண்டைய ஒலி

72
00:05:00,560 --> 00:05:01,880
எனக்கு மிகவும் பிடித்தது.

73
00:05:02,640 --> 00:05:05,880
ஆனால் அந்தத் தளத்தில் பெரும்பாலும் என்னுடைய தனிப்பட்ட வரலாற்றுத் தொகுப்புதான் இருந்தது.

74
00:05:06,000 --> 00:05:09,400
பண்டைய சிந்துவெளி தொடர்பான விஷயங்களை நான் அதில் பதிவேற்றவில்லை.

75
00:05:11,000 --> 00:05:12,720
அதைப்பற்றி அதிகம் யோசிக்கவும் இல்லை. 

76
00:05:14,720 --> 00:05:17,640
ஆனால், அடுத்த சில வாரங்களில் டாக்டர் ரிச்சர்ட் மெடோவிடமிருந்து 

77
00:05:17,640 --> 00:05:18,720
ஹரப்பா தொல்லியல் ஆய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி 

78
00:05:18,960 --> 00:05:22,440
எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. 

79
00:05:22,920 --> 00:05:24,040
எனக்கு அவற்றைப் பற்றி என்ன தெரியும்? 

80
00:05:25,040 --> 00:05:28,000
அவர் அத்திட்டத்தின் இணை இயக்குநரான டாக்டர் மார்க் கெனோயரையும் மின்னஞ்சலில் இணைத்திருந்தார்.

81
00:05:29,440 --> 00:05:31,880
"நாம் ஏன் இணைந்து வேலை செய்யக்
கூடாது?" என்று நான் கேட்டேன்.

82
00:05:34,240 --> 00:05:37,240
அதற்கு மார்க், 90 ஸ்லைடுகள் கொண்ட ஒரு ஆவணத்தை எனக்கு அனுப்பினார்.

83
00:05:37,240 --> 00:05:39,200
அதனை எனது harappa.comஇல்  

84 
00:05:39,480 --> 00:05:40,320
இணையப்பக்கத்தில் பிரசுரிக்க விரும்பினார்.

85
00:05:41,920 --> 00:05:44,560
அப்போது நான் இளைஞன். 

86
00:05:44,560 --> 00:05:45,720
இது எங்கு கொண்டு செல்லும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. 

87
00:05:49,680 --> 00:05:53,040
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் harappa.com 

88
00:05:53,040 --> 00:05:54,760
ஒரு முன்னணி இணையதளமாக 

89
00:05:54,880 --> 00:05:57,320
பண்டய சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய தளமாக உருவெடுத்துள்ளது. 

90
00:05:57,600 --> 00:06:01,440
இதற்குப் பங்களித்த முக்கிய அறிஞர்களுக்கும் குறிப்பாக 

91
00:06:01,600 --> 00:06:04,720
உலகின் முன்னணி பண்டைய
சிந்து தொல்பொருள் ஆய்வாளர் மார்க்கிற்கும் நன்றி.

92
00:06:07,000 --> 00:06:09,840
விவரம் அறிந்த ஒரு துப்பறிவாளன்

93
00:06:16,440 --> 00:06:19,680
ஒரு நாளில் ஆயிரக்கணக்கான மக்களுடன்
பேரார்வத்தைப் பகிர்ந்துகொள்வது போலதான்  என்னுடைய வேலை.

94
00:06:16,440 --> 00:06:19,680
மீண்டும் மொகஞ்சோதாரோவிற்கு வருவதற்கு முன்பு, நான் இந்தியாவில் சென்னையில் நடைபெற்ற 

95
00:06:19,680 --> 00:06:20,880
ஒரு மாநாட்டில் உரையாற்றினேன்.

96
00:06:21,440 --> 00:06:25,120
அது ஜான் மார்ஷல் பண்டைய சிந்து நாகரிகத்தைக் கண்டுபிடித்ததை வெளி உலகிற்கு அறிவித்ததன் 
100ஆவது ஆண்டு விழா.

97
00:06:25,240 --> 00:06:27,600
பண்டைய சிந்து நாகரிகத்தைச் சேர்ந்தது.

98
00:06:28,200 --> 00:06:30,920
நான் ஒன்றும் பண்டைய சிந்துவெளி ஆய்வாளன் அல்ல.

99
00:06:31,040 --> 00:06:32,600
ஆனால், நான் அதனைப் பற்றி அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வமுடையவன். 

100
00:06:32,680 --> 00:06:35,240
அதனை நோக்கி ஈர்க்கப்பட்டவன். 

101
00:06:35,320 --> 00:06:38,000
மேலும் மிகவும் புதிரான இந்த நாகரிகத்தைப்   புரிந்துகொள்ள 

102
00:06:38,000 --> 00:06:38,640
முயற்சித்து வருகிறேன்

103
00:06:38,760 --> 00:06:41,360
இது உலகிற்கு முக்கியமான நாகரிகம்

104
00:06:48,280 --> 00:06:50,920
ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது, ஆனாலும்
நமக்கு இன்னும் 

105
00:06:50,920 --> 00:06:52,160
அவர்களின் மொழியில் ஒரு சொல்லோ

106
00:06:52,280 --> 00:06:56,200
பெயரோ, ஆட்சியாளரோ, பின்பற்றிய மதமோ அல்லது கூட தெரியாது. 

107
00:06:59,160 --> 00:07:03,120
ஆனால் தென்னிந்தியாவில் பல தமிழர்கள் அவர்களின் பண்பாடு 

108
00:07:03,320 --> 00:07:06,560
மொகஞ்சோதாரோவில் இருந்து தோன்றியதாக நம்புகின்றனர்.

109
00:07:07,000 --> 00:07:11,480
தேசிய எல்லைகள் 1947-இல் தான் வரையப்பட்டன.

110
00:07:12,640 --> 00:07:17,000
இங்கு முதல் தெற்கு ஆசிய நகர நாகரிகம் 

111
00:07:17,160 --> 00:07:19,400
சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்தது.

112
00:07:27,720 --> 00:07:34,080
2. நகரம்

113
00:07:34,160 --> 00:07:38,400
அதிகாலையில், நான் என்னால் முடிந்தவரை
சுறுசுறுப்பாக எழுந்து விரைந்தேன்,

114
00:07:38,560 --> 00:07:40,240
டாக்டர் ரோமிலா தாப்பர், இந்தியாவின் முன்னணி வரலாற்றாசிரியர்: 

115
00:07:40,320 --> 00:07:42,480
அது முற்றிலும் அற்புதமாக இருந்தது.

116
00:07:42,640 --> 00:07:45,400
நான் நீண்ட நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்,

117
00:07:45,440 --> 00:07:46,480
நின்றுகொண்டிருந்தேன்

118
00:07:47,080 --> 00:07:49,960
இந்த நகரத்தில் வாழ்ந்தது  எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்

119
00:07:50,080 --> 00:07:51,480
என்று யோசித்துப் பார்த்தேன்.

120
00:07:53,560 --> 00:07:55,720
டாக்டர் குலாம் முஸ்தபா ஷார்: தொல்பொருள் ஆய்வாளர்:
நாம் மொகஞ்சோதாரோவின் 

121
00:07:55,720 --> 00:07:56,680
8% பகுதியை
மட்டுமே அகழ்வாராய்ச்சி செய்துள்ளோம்.

122
00:07:56,800 --> 00:08:00,120
இன்னும், 92%
அகழப்படவே இல்லை.

123
00:08:00,840 --> 00:08:07,560
மொகஞ்சோதாரோ, 1925

124
00:08:15,960 --> 00:08:18,520
52 ஆண்டுகளுக்குப் பிறகு நான் அங்கு சென்றபோது

125
00:08:18,840 --> 00:08:22,360
நகரத்தின் அளவையும் ஒழுங்கமைப்பையும்
கண்டு நான் பிரமித்துப்போனேன்.

126
00:08:30,160 --> 00:08:32,200
உண்மையில், புகழ்பெற்ற மதகுரு-அரசர் சிற்பம்

127
00:08:32,280 --> 00:08:35,360
ஸ்தூப மேட்டில் இருந்து வெகு தொலைவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

128
00:08:39,400 --> 00:08:41,480
அந்தச் சிற்பத்தில் இருப்பது யார் என்று நமக்கு எதுவுமே தெரியாது.

129
00:08:56,680 --> 00:08:59,080
4000 ஆண்டுகளாக இந்த நகரத்தின் எவ்வளவு பகுதி கண்டுபிடிக்கப்பட்டு

130
00:08:59,080 --> 00:09:00,440
மீண்டும் தொலைக்கப்பட்டது என்பதை நினைத்து 

131
00:09:00,680 --> 00:09:03,760
ஒருவர் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 

132
00:09:04,680 --> 00:09:13,640
உள்ளூர் மக்களாகிய இந்த வயதான தொழிலாளர்கள் 

133
00:09:06,800 --> 00:09:10,160
தங்கத்தாலான பொருட்களையோ அல்லது ஆபரணங்களையோ கண்டுபிடிக்கும் போது 

134
00:09:10,200 --> 00:09:11,280
அவற்றைப் பையில் போட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவதாக 

135
00:09:11,440 --> 00:09:13,640
கூறுகின்றனர். 

136
00:09:13,760 --> 00:09:17,320
ஏனென்றால், அக்காலத்தில் ஆங்கிலேயர்கள்
இரண்டு அணாக்கள் மட்டுமே கொடுத்து வந்தனர்.

137
00:09:17,680 --> 00:09:20,600
அது ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பகுதியாகும். அதுதான் ஒரு நாள் கூலி.

138
00:09:20,720 --> 00:09:23,400
அதனால் நாங்கள் தங்க ஆபரணங்களைக் கொடுக்கவில்லை. 

139
00:09:25,240 --> 00:09:28,000
இந்த விஷயங்கள் எல்லாம் என்னவென்றே
எங்களுக்குத் தெரியவில்லை.

140
00:09:28,120 --> 00:09:30,280
அவை முத்திரைகளோ இல்லை வேறு எதுவுமோ.

141
00:09:30,480 --> 00:09:33,000
முகமது இல்யாஸ், அகழ்வாராய்ச்சிப் பணியாளர்
நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது

142
00:09:33,120 --> 00:09:34,200
அவற்றை வைத்து விளையாடுவோம்.

143
00:09:34,320 --> 00:09:37,520
கால்களால் எட்டி உதைப்போம். 

144
00:09:37,680 --> 00:09:41,040
வழக்கமான முத்திரை  1 அங்குல சதுரம்

145
00:09:41,120 --> 00:09:44,200
2.58 செ.மீ.

147
00:09:46,400 --> 00:09:47,520
எந்தச் சூழ்நிலையிலும் பண்டைய உலகைச் சார்ந்த ஒரு நகரத்திற்குள் செல்ல நீங்கள் விரும்பமாட்டீர்கள். 

148
00:09:47,640 --> 00:09:49,280
அவை மிகவும் அசுத்தமாகவும், நோய் நிறைந்தும், 

149
00:09:49,400 --> 00:09:52,200
எங்கும் வயிற்றுப்போக்குடனும் காணப்படுகின்றன. 
ஜோ மேனிங்,
யேல் தொல்பொருள் ஆய்வாளர்

150
00:09:52,280 --> 00:09:54,920
ஆனால், மொகஞ்சோ-தாரோ அவ்வளவு
அசுத்தமாக இருக்கவில்லை.

151
00:09:56,080 --> 00:09:59,600
இந்த நகரம் அந்தக் காலத்தில் மிகச்சிறந்த சுகாதார அமைப்புகளைக் கொண்டிருந்த நகரமாக இன்று அறியப்படுகிறது. 

152
00:09:59,760 --> 00:10:04,600
மூடப்பட்ட தெரு வடிகால்கள், இரண்டாம் மாடிக் குளியலறைகள் 

153
00:10:04,800 --> 00:10:07,480
இவற்றினுள் பாய்ந்து சென்ற குழாய்கள்  நகர் முழுவதும் இருந்தன.

154
00:10:08,520 --> 00:10:10,400
மேலும் நூற்றுக்கணக்கான
கிணறுகளும் இருந்தன.

155
00:10:10,920 --> 00:10:14,200
ஜெர்மானிய தொல்பொருள் ஆய்வாளர் மைக்கேல் ஜான்சன்

156
00:10:14,200 --> 00:10:15,440
'வாசர்லஸ்' அல்லது 

157
00:10:15,760 --> 00:10:17,240
நீரின் சுகபோகம் என்கிற சொல்லைப் பயன்படுத்தி இதனை விவரித்திருந்தார். 

158
00:10:24,800 --> 00:10:28,640
அநேகமாக ‘பெரிய நீராடு தொட்டி’தான்
வெண்கலக் காலத்தின் மிகச்சிறந்த

159
00:10:28,640 --> 00:10:30,160
நீர் சார்ந்த சாதனையாகும்.

160
00:10:32,480 --> 00:10:35,680
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது

161
00:10:42,520 --> 00:10:45,120
பெரிய நீராடு தொட்டியில் இருந்து செல்லும் பிரம்மாண்டமான
வடிகாலுக்குள் எட்டிப் பார்த்தபோது

162
00:10:45,120 --> 00:10:46,200
எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது,

163
00:10:46,640 --> 00:10:48,200
இந்த வடிகால்களை சுத்தம் செய்தது யார்?

164
00:10:50,480 --> 00:10:53,680
நிச்சயமாக, இங்கு சமூகப்
பிரிவினைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

165
00:10:55,440 --> 00:10:57,920
ஹரப்பாவைப் போலவே, நகரின் பகுதிகள்
ஒவ்வொன்றும்

166
00:10:57,920 --> 00:10:59,200
சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளன; 

167
00:10:59,520 --> 00:11:02,360
இது ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனி இனக்குழு அல்லது கைவினைத் திறன் கொண்ட சமூகங்கள் இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. 

168
00:11:04,160 --> 00:11:07,040
முதல் தெரு நகரத்தின் முழு சுற்றளவையும் ஒட்டி நீண்டு செல்கிறது. 

169
00:11:09,640 --> 00:11:12,280
மொகஞ்சோதாரோவின் முதல் தெருவின் அகலத்தைக் காட்டும் வகையில் 

170
00:11:12,280 --> 00:11:13,440
மக்கள் 
கூட்டத்தால் நிறைந்திருக்கிறது.

171
00:11:13,560 --> 00:11:15,040
சில தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் 

172
00:11:15,480 --> 00:11:18,200
வழி நெடுகிலும் கடைகளும்
பட்டறைகளும் இருந்தன  என நம்புகின்றனர். 

173
00:11:20,720 --> 00:11:24,160
இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்தார்கள்
என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

174
00:11:24,440 --> 00:11:26,600
மீன் வியாபாரிகள் முதல் பொற்கொல்லர்கள் வரை, 

175
00:11:26,960 --> 00:11:30,040
மண்பாண்டத் தொழிலாளர்கள், துணி
வியாபாரிகள் முதல், நம்மால் இன்னும் பெயரிட முடியாத 

176
00:11:30,040 --> 00:11:31,720
பொருட்களை
விற்கும் வியாபாரிகள் வரை.

177
00:11:32,720 --> 00:11:37,080
அசல் சிந்துவெளிக் குறியீடுகள்

178
00:11:39,080 --> 00:11:41,480
அவர்கள் யாராக இருந்தாலும் சரி. தங்கள் குழந்தைகளை அதிகமாக 

179
00:11:41,480 --> 00:11:42,400
செல்லம் கொடுத்து வளர்த்திருக்க வேண்டும்.

180
00:11:43,200 --> 00:11:46,280
வேறு ஏதேனும் வெண்கலக் கால நகரத்தில் தோண்டப்பட்ட ஒவ்வொரு சதுர
மீட்டருக்கும் 

181
00:11:46,440 --> 00:11:49,440
இத்தனை பொம்மைகள்
கிடைத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

182
00:11:56,760 --> 00:12:01,680
பறவையைப் போல ஒலி எழுப்பும் பொம்மைகள் இன்றும்
கிராமங்களில் பரவலாகப் புழக்கத்தில் உள்ளன.

183
00:12:02,440 --> 00:12:05,760
மேலும், விளையாட்டு மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே,
பறவைகள் வெளியேறுவது போன்ற தோற்றத்தில் 

184
00:12:05,760 --> 00:12:07,000
பறவைக் கூண்டுகளைச் செய்வார்கள்.

185
00:12:11,720 --> 00:12:14,680
அவர்கள் ஏராளமான விளையாட்டுகளை
விளையாடினார்கள் என்பதற்கு இதுவே சான்று.

186
00:12:15,680 --> 00:12:16,680
இதைப் பாருங்கள். 

187
00:12:17,680 --> 00:12:19,960
நான் கூட தரையில் ஒரு பகடைக் கிடப்பதைக் கண்டேன். 

188
00:12:22,200 --> 00:12:24,880
உலகின் விளையாட்டுகளில் ஏதேனும்
ஒன்று இங்கிருந்து தோன்றியதா?

189
00:12:28,280 --> 00:12:31,760
அது ஒரு அமைதியான சமத்துவ நாகரிகமாக
இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள்.

190
00:12:32,520 --> 00:12:34,320
நான் அந்தக் கதையை ஒருபோதும் நம்பியதில்லை.

191
00:12:35,600 --> 00:12:39,320
பெரிய வீடுகள் மற்றும் ஆடம்பரமான ஆபரணங்கள்
போன்ற மேட்டுக்குடியினர் இருந்ததற்கான

192
00:12:39,320 --> 00:12:40,640
ஏராளமான சான்றுகள் உள்ளன; 

193
00:12:41,520 --> 00:12:43,240
ஆயுதங்கள், மோதல்கள் உட்பட. 

194
00:12:45,000 --> 00:12:47,560
ஆனால் அதே காலகட்டத்தில் இருந்த அண்டை நாகரிகங்களுடன் ஒப்பிடும்போது, 

195
00:12:47,600 --> 00:12:49,080
போர் மனப்பான்மைக்கான சான்றுகள் மிகவும் 

196
00:12:49,440 --> 00:12:50,360
குறைவாகவே உள்ளன

197
00:12:53,680 --> 00:12:54,920
சிந்து நாகரிகத்தின் இரண்டு முக்கியமான உருவச் சிற்பங்களும் 

198
00:12:55,000 --> 00:12:58,160
மொகஞ்சோதாரோவில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. 

199
00:12:59,280 --> 00:13:02,880
மதகுரு-அரசனை விட அந்த நடன மங்கை
அதிகப் புகழ் பெற்றிருக்கலாம்.

200
00:13:04,400 --> 00:13:06,440
சிலர் அது உண்மையிலேயே நடன நடனமங்கையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

201
00:13:06,560 --> 00:13:09,520
அது நடன மங்கைதான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். 

202
00:13:09,760 --> 00:13:12,480
ஏனென்றால் அவள் இடுப்பில் கை வைத்திருக்கும் தோரணை நீண்ட காலமாக 

203
00:13:12,480 --> 00:13:13,640
நீடித்து வருவதை கருத்தில் கொள்கிறேன். 

204
00:13:23,400 --> 00:13:26,160
நீங்கள் அந்த நடன மங்கையைப்
பார்த்தீர்களா? அவள் நடனமாடுகிறாளா என்ன?

205
00:13:26,280 --> 00:13:27,920
நடன மங்கை நடனமாடுவது போல் உங்களுக்குத் தெரியவில்லையா? 

206
00:13:28,040 --> 00:13:29,080
கண்டிப்பாக இல்லை!

207
00:13:29,200 --> 00:13:30,440
டாக்டர் ஷெரீன் ரத்னாகர், முன்னணி இந்திய
தொல்பொருள் ஆய்வாளர்,

208
00:13:30,560 --> 00:13:32,800
ஒழுக்கமற்ற பெண்கள், நடனமாடி பிரிட்டிஷ் துருப்புக்களை மகிழ்விப்பதற்காக 

209
00:13:33,040 --> 00:13:36,400
அங்கு இருந்தனர் என எட்வர்டியர்கள் நினைத்தனர்.

210
00:13:37,480 --> 00:13:39,640
இல்லத்தரசி (நடனக் கலைஞர் அல்ல) கட்ச் பகுதி

211
00:13:39,720 --> 00:13:43,760
நடன மங்கை காலனித்துவப் பார்வையின் பாரபட்சம் என்பதை மார்க் ஒப்புக்கொள்வார். 

212
00:13:44,400 --> 00:13:48,080
இந்த மொகஞ்சோதாரோ உருவம் ஒரு ‘பூசாரி’யாக, அதாவது

213
00:13:48,240 --> 00:13:51,080
மதச் சடங்குகளை நிறைவேற்றும் ஒருவராக இருந்திருக்கலாம் என்பதையே மார்க் முன்னிறுத்துகிறார்.

214
00:13:51,200 --> 00:13:52,800
கோயில் நடனக் கலைஞர், புவனேஸ்வர்,
ஒடிஷா. வரைந்தவர்: மார்க் கெனோயர்

215
00:13:52,880 --> 00:13:56,200
நாம் கடந்த காலத்தைக் கண்களை ஈர்க்கும்

216
00:13:56,320 --> 00:13:57,720
வண்ணக் கண்ணாடித் துண்டுகளின் வழியே காண்கிறோம்.

217
00:13:57,840 --> 00:13:59,280
மொகஞ்சோதாரோ, நடன மங்கையின்
செப்புச் சிலை.

218
00:14:00,320 --> 00:14:02,960
அதிகம் அறியப்படாத
இரண்டாவது நடனக் கலைஞர் சிலையும்

219
00:14:02,960 --> 00:14:04,120
மொகஞ்சோதாரோவில் கண்டறியப்பட்டது. 

220
00:14:05,880 --> 00:14:07,640
இந்தப் பெண்கள் நடனம் ஆடுவதைத்
தாண்டி 

221 
00:14:07,640 --> 00:14:08,120
வேறு சிலவற்றையும் செய்திருக்கலாம்.

222
00:14:08,440 --> 00:14:12,240
தொன்மையான இந்தியப் பழங்குடி சமூகங்களில்,
நடனக் கலைஞர்கள் 

223
00:14:12,240 --> 00:14:13,720
ஆட்சி செய்ததாகக் கதைகள் உள்ளன.

224
00:14:17,080 --> 00:14:21,000
சுதந்திரத்தின் போது இந்த இரண்டு
உருவச்சிலைகளில் ஒன்று

225
00:14:21,080 --> 00:14:23,800
இந்தியாவிலும் மற்றொன்று பாகிஸ்தானிலும் தங்கிவிட்டன. 

226
00:14:28,720 --> 00:14:32,400
இந்திய பிளவு- பாகிஸ்தான்
புதிய டொமினியன், ஆல்பர்ட் க்ரோப்

227
00:14:33,800 --> 00:14:37,280
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ்
இந்தியா, இந்தியா மற்றும்

228
00:14:37,280 --> 00:14:39,160
பாகிஸ்தான் எனப் பிரிக்கப்பட்டபோது,

229
00:14:39,560 --> 00:14:42,760
சிந்துவெளி தொல்பொருட்களைப் புதிய நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன.

230
00:14:43,320 --> 00:14:47,480
மொகஞ்சோதாரோவின் மிகச்சிறந்த கழுத்தணி இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டது.

231
00:14:48,000 --> 00:14:52,040
அதன் ஒரு பகுதி இன்று இஸ்லாமாபாத்திலும் 
இன்னொரு பகுதி டெல்லியிலும் உள்ளது. 

232
00:14:54,440 --> 00:14:58,960
உண்மையில், மிக முக்கியமான பல  பொருட்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. 

233
00:15:01,400 --> 00:15:03,480
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது

234
00:15:03,560 --> 00:15:07,080
4,000 ஆண்டுகள் பழமையான அந்த நாகரிகம்
கண்டுபிடிக்கப்பட்ட சில காலத்திலேயே 

235
00:15:07,800 --> 00:15:09,200
பிரித்துக்கொள்ளப்பட்டது.

236
00:15:14,000 --> 00:15:20,720
3. கோட்டை

237
00:15:22,720 --> 00:15:24,920
நகரத்தை நோக்கியவாறு உள்ள ஒரு மேடான இடத்தில் 

238
00:15:25,040 --> 00:15:28,920
மிகவும் அறியப்பட்ட ஸ்தூப
மேடு என்று அழைக்கப்படும் பகுதி அமைந்துள்ளது. 

239
00:15:29,720 --> 00:15:33,800
இது பொ.ஆ.மு. 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

240
00:15:34,320 --> 00:15:37,760
இது சிந்துவெளி நாகரிகக் காலத்திலும் புனிதத் தலமாக இருந்ததா இல்லையா

241
00:15:37,920 --> 00:15:39,440
என்பது பெரிய சர்ச்சையாக உள்ளது.

242
00:15:40,120 --> 00:15:44,560
முதல் அகழ்வாராய்ச்சியாளரான ஆர்.டி. பானர்ஜி, புனிதத் தலங்களில் வைக்கப்படும் வகையிலான 

243
00:15:44,560 --> 00:15:46,200
ஆயிரக்கணக்கான  நேர்த்திக்கடன்

244
00:15:46,840 --> 00:15:50,960
பானைகளைக் கண்டுபிடித்தார்.

245
00:15:52,920 --> 00:15:53,920
தளம் எண் I-இன் முழுப் பகுதியும்
ஈமத்தாழிகளால் நிரம்பியிருந்தது.

246
00:15:54,120 --> 00:16:00,000
ஆர்.டி. பானர்ஜி, 1922-23 மொகஞ்சோதாரோவின்
முதல் அகழ்வாராய்ச்சியாளர்

247
00:16:00,080 --> 00:16:03,120
இருப்பினும், பிரிட்டிஷ் தலைமை
அகழ்வாராய்ச்சியாளரான ஜான் மார்ஷலும் மற்றவர்களைப் போலவே இந்த விளக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். 

248
00:16:03,200 --> 00:16:07,480
ஜான் மார்ஷலும் மற்றவர்களைப் போலவே இந்த விளக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். 

249
00:16:12,720 --> 00:16:17,560
சமீப காலங்களில், பானர்ஜியின் கருத்துடன் டாக்டர் ஜியோவானி
வெரார்டியும் உடன்பட்டார்.

250
00:16:18,160 --> 00:16:22,400
சிந்துவெளி நாகரிக காலத்திலும் இது ஒரு புனிதத் தலமாக இருந்தது என்று அவர் வாதிட்டார்.

251
00:16:22,560 --> 00:16:25,600
மேலும், ஒருகாலத்தில் மேடைக்கு இட்டு சென்ற இந்தப் படிகள் 

252
00:16:25,600 --> 00:16:26,880
பண்டைய மெசபடோமியாவில்
இருந்த ஜிகுராட்களைப் போலவே உள்ளதாக

253
00:16:27,280 --> 00:16:30,800
அவர் கருதினார். 

254
00:16:31,640 --> 00:16:34,400
இந்த அமைப்பு அந்த மேடு முழுவதையும்
புனிதமானதாக ஆக்கியிருக்கும்.

255
00:16:40,720 --> 00:16:42,800
இப்போது பெரிய நீராடு தொட்டி குறித்து பார்க்கலாம். 

256
00:16:43,000 --> 00:16:45,440
இது ஒரு சடங்கு நடைபெறும் இடமாக இருந்திருக்கலாம் என்பதை

257
00:16:45,440 --> 00:16:47,040
பெரும்பாலான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

258
00:16:49,080 --> 00:16:52,520
தற்காலத்தில் இந்து, சீக்கியக்
கோயில்களுக்கு அருகில்

259
00:16:52,520 --> 00:16:54,280
பெரிய நீர்த்-தொட்டிகள் இருப்பது நமக்குத் தெரியும்.

260
00:16:55,040 --> 00:16:58,680
இவற்றிற்கு இடையில் ஆழமான தொடர்பு இருப்பதாக நான் நினைக்கிறேன், 

261
00:16:58,680 --> 00:17:00,400
ஆனால் இதை எல்லோரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

262
00:17:01,320 --> 00:17:03,480
அது ஒரு அரச குடும்ப பதவியேற்புச் சடங்காக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

263
00:17:03,640 --> 00:17:06,720
டாக்டர். ஷெரீன் ரத்னாகர், முன்னணி இந்திய
தொல்லியல் நிபுணர்

264
00:17:07,440 --> 00:17:11,880
ஒருவர் ஒரு சடங்கு ரீதியாகக்
பெரிய நீராடு தொட்டிக்குள் இறங்கி

265
00:17:11,880 --> 00:17:13,560
மீண்டும் வெளியே வந்திருக்கிறார்.

266
00:17:14,560 --> 00:17:18,520
தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்குவதற்கு ஒரு
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான

267
00:17:18,520 --> 00:17:19,760
படிகள் மட்டுமே உள்ளன.

268
00:17:20,080 --> 00:17:21,520
வெளியேறுவதற்கும் அப்படியே. 

269
00:17:22,560 --> 00:17:24,760
இது ஏதோ ஒரு தீவிரமான சடங்கு.

270
00:17:27,400 --> 00:17:30,280
உண்மையிலேயே  இந்த முழுப் பகுதியும் 
புனிதமானதாக இருந்திருந்தால்,

271
00:17:30,440 --> 00:17:34,960
ஆரம்பகால மெசபடோமியா நகரங்களைப் போலவே இந்த நகரத்தை நிறுவியவர்களும் 

272
00:17:35,520 --> 00:17:38,520
மதகுருக்கள் என்ற கருத்தை அது ஆதரிக்கக்கூடும்.

273
00:17:40,000 --> 00:17:42,120
சிந்துவெளி நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சில சிற்பங்களில் 

274
00:17:42,200 --> 00:17:45,520
ஏறக்குறைய அனைத்தும்
மொகஞ்சோதாரோவில்தான் கிடைத்துள்ளன.

275
00:17:45,960 --> 00:17:47,760
அவற்றில் மதகுரு பாணி மேலோங்கி இருக்கிறது.

276
00:17:48,480 --> 00:17:51,800
தலைமுடி பின்புறமாகப் பின்னப்பட்டுள்ளது. ஒரு கையை முழங்காலின் மீது வைத்தபடி உள்ளது. 

277
00:17:53,640 --> 00:17:56,560
தோலவிராவிலும் இதே போன்ற
உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

278
00:17:56,720 --> 00:17:58,840
தோலவிரா, இந்தியா ~பொ.ஆ.மு. 2500

279
00:17:58,920 --> 00:18:00,680
மற்றொரு இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர், 

280
00:18:00,800 --> 00:18:04,360
மாசிமோ விடாலே, இதேபோன்ற மதகுருமார் சிற்பங்கள்

281
00:18:04,480 --> 00:18:08,040
அக்காலத்தில் ஈரான் மற்றும்
ஆப்கானிஸ்தானில் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். 

282
00:18:09,560 --> 00:18:12,680
முண்டிகாக் ~பொ.ஆ.மு 2100

283
00:18:12,760 --> 00:18:16,000
மொகஞ்சோதாரோ ~பொ.ஆ.மு 2300

284
00:18:16,080 --> 00:18:18,840
எனது மறைந்த நண்பர் ஐராவதம் மகாதேவன், 

285
00:18:19,000 --> 00:18:22,520
சிந்து எழுத்துமுறையில் இந்தியாவின்
முன்னணி நிபுணராக இருந்தார்.

286
00:18:23,040 --> 00:18:25,320
பொதுவாக ஜாடிக்
குறியீடு என்று அழைக்கப்படும் இந்தக் குறியீடு 

287
00:18:25,440 --> 00:18:27,920
சிந்து எழுத்து முறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

288
00:18:29,400 --> 00:18:30,800
இந்தியப் பண்பாட்டில்,

289
00:18:30,960 --> 00:18:35,400
ஆளும் வர்க்கங்கள்,
இளவரசர்கள் மற்றும் மதகுருக்கள் ஆகியோர் 

290
00:18:35,560 --> 00:18:38,160
தாங்கள் ஒரு ஜாடி(குடம்)யிலிருந்து வந்ததாகத்தான்
எப்போதும் கூறிக்கொள்கின்றனர்.

291
00:18:46,200 --> 00:18:48,800
முக்கிய ரிஷிகள் அனைவரும்
குடத்தில்(ஜார்) பிறந்தவர்கள்.

292
00:18:48,920 --> 00:18:51,480
அகஸ்திய-தமிழ் ரிஷி

293
00:18:53,440 --> 00:18:55,480
பல சிந்துவெளி எழுத்துக்களில் இந்த ஜாடிக் குறியீடு 

294
00:18:55,560 --> 00:18:59,400
வணிகக் குறியீடு என கருதத்தக்க சின்னங்களுடன் இணைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 

295
00:19:00,040 --> 00:19:01,920
மதகுருக்கள் வர்த்தகத்தைக்
கட்டுப்படுத்தினார்களா?

296
00:19:02,760 --> 00:19:07,080
பிற்கால பௌத்த, ஜைன, இந்து மரபில்  மதமும் வணிகமும்

297
00:19:07,240 --> 00:19:09,560
பிரிக்க முடியாதவையாக இருந்தன..

298
00:19:10,320 --> 00:19:16,040
மேலும் பல ஆதாரங்கள் ஒத்த அளவுடையப் புதிரார்ந்த இந்த அறைகளிலிருந்து
கிடைக்கின்றன.

299
00:19:16,680 --> 00:19:19,920
இதேபோன்ற ஒரு கட்டிட அமைப்பு
ஹரப்பாவிலும் கண்டறியப்பட்டது.

300
00:19:21,080 --> 00:19:23,480
அவை அநேகமாக வர்த்தகத்திற்கான
சேமிப்புக் கிடங்குகளாக இருந்திருக்கலாம்.

301
00:19:23,880 --> 00:19:27,920
ஆனால், ஒரு ஆங்கிலத் தொல்பொருள்
ஆய்வாளர் முதலில் கற்பனை செய்ததைப் போல

302
00:19:27,920 --> 00:19:29,800
அவை தானியக்களஞ்சியங்கள் அல்ல. 

303
00:19:32,480 --> 00:19:35,520
மொகஞ்சோதாரோவில், இவை பெரிய கோட்டைக்குள்ளே 

304
00:19:35,840 --> 00:19:37,840
நீராடு தொட்டிக்கு அருகிலேயே
இருக்கின்றன. 

305
00:19:38,560 --> 00:19:41,840
இது வர்த்தகம் மத மேட்டுக்குடியினரால்
கட்டுப்படுத்தப்பட்டது 

306
00:19:41,840 --> 00:19:43,280
என்பதை உணர்த்துகிறது.

307
00:19:45,520 --> 00:19:48,640
அப்படியென்றால், அவர்கள் எவ்வாறு
சமூக ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்தனர்?

308
00:19:50,920 --> 00:19:52,480
வன்முறையின் மூலமா?

309
00:19:54,400 --> 00:19:58,760
மொகஞ்சோதாரோவில் காணப்படும் மிகவும்
பிரபலமான கதை முத்திரைகளில் ஒன்று

310
00:19:58,840 --> 00:20:01,960
தலை துண்டிக்கப்பட்டு மனிதன் பலியிடப்படுவதைச் சித்தரிக்கிறது. 

311
00:20:04,560 --> 00:20:08,120
ஆனால், அந்நகரத்திலிருந்து கிடைத்த மற்றொரு
கதை முத்திரை, 

312
00:20:08,120 --> 00:20:09,840
சிலர் ஆதி-சிவன், பசுபதி அல்லது 

313
00:20:10,120 --> 00:20:13,200
மிருகங்களின் அதிபதி என்று அழைக்கும் ஒரு உருவத்தைக் காட்டுகிறது. 

314
00:20:13,560 --> 00:20:16,960
அதில், விலங்குகள் அமைதியான
பணிவுடன் அவரிடம் வருவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

315
00:20:17,880 --> 00:20:19,120
அது வெவ்வேறு இனக்குழுக்கள், நகரங்கள், வணிக்க குழுக்களைப் 

316
00:20:19,200 --> 00:20:22,720
பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கலாம். 

317
00:20:29,800 --> 00:20:32,080
வலுவான ஆளும் வர்க்கமோ அல்லது மத நம்பிக்கையோ இல்லாத இவ்வளவு பெரிய ஒரு நகரத்தை என்னால்
கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை..

319
00:20:36,240 --> 00:20:37,720
ஆனால் மேலதிக ஆராய்ச்சி இல்லாததால்,

320
00:20:37,960 --> 00:20:41,480
அது என்னவாக இருந்தது என்பது
பெரும்பாலும் நம் கற்பனையைப் பொறுத்ததே.

321
00:20:41,920 --> 00:20:44,520
அறியப்பட்ட மொகஞ்சோதாரோவை முன்னிட்டு 

322
00:20:44,880 --> 00:20:47,600
நம்முடைய கற்பனை ஏற்கனவே தறிகெட்டு ஓடுகிறது. 

323
00:20:53,320 --> 00:20:55,920
மொகஞ்சோதாரோ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றே நமக்குத் தெரியாது.

324
00:20:56,560 --> 00:20:59,480
அதற்கு 'இறந்தவர்களின் மேடு' என்று
பொருள் என ஜான் மார்ஷல் கூறினார்.

325
00:20:59,560 --> 00:21:00,800
HR பகுதி, 1925

326
00:21:00,880 --> 00:21:03,120
முற்காலத்தில் மக்கள் இதை ஒரு
மயானம் என்றும் இங்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் சொல்வதுண்டு.

327
00:21:03,240 --> 00:21:04,720
இர்ஷாத் அலி சோலங்கி, சுற்றுலா வழிகாட்டி:

328
00:21:05,200 --> 00:21:09,320
அவர்கள் இந்த மயானத்திற்கு வந்து விறகுகளை

329
00:21:09,480 --> 00:21:12,800
வெட்டி எடுத்துச் செல்லத் தயங்கினார்கள்.

330
00:21:12,960 --> 00:21:14,960
HR பகுதி, 1925

331
00:21:15,040 --> 00:21:16,800
சிலர் அது ஒரு பாழடைந்த
நகரம் என்றும் 

332
00:21:16,920 --> 00:21:18,320
அதன் அருகில் செல்வதே பாவம் என்றும் சொல்வதுண்டு.

333
00:21:32,040 --> 00:21:38,960
4. எழுத்து

334
00:21:44,120 --> 00:21:46,280
உங்கள் கருத்துப்படி, மொகஞ்சோதாரோ
என்பதன் பொருள் என்ன?

335
00:21:46,440 --> 00:21:48,120
இது ,’இறந்தவர்களின் மேடா’ இல்லையா?

336
00:21:48,400 --> 00:21:50,560
-உங்கள் விளக்கம் என்ன?
-இல்லை…இல்லை…

337
00:21:50,680 --> 00:21:52,120
தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் குலாம் முஸ்தபா ஷார்

338
00:21:52,120 --> 00:21:52,680
மோகன் என்பது
கிருஷ்ணரின் பட்டப்பெயர்.

339
00:21:52,800 --> 00:21:55,800
இது இந்துப் பெயராக இருப்பதால், இங்குள்ள
மக்களுக்கு அதனைப் பிடிப்பதில்லை.

340
00:21:56,440 --> 00:21:59,400
மேலும், கதவையும் நாங்கள் 
மோஹோ என்று சொல்வோம்.

341
00:21:59,560 --> 00:22:02,800
மோஹோ என்றால் 

342
00:21:59,560 --> 00:22:02,800
முன்னால் என்றும் பொருள். 

343
00:22:03,960 --> 00:22:07,760
ஆகவே, மொகஞ்சோதாரோ என்றால்
முகம் கொண்ட நகரம் என்று பொருள்.

344
00:22:22,720 --> 00:22:25,720
மொகஞ்சோதாரோ குறியீடுகளின் 
நகரமாகவும் விளங்குகிறது.

345
00:22:27,200 --> 00:22:28,680
ஆனால் நம்மால் அவற்றை இன்னும் படிக்க முடியவில்லை.

346
00:22:28,800 --> 00:22:31,640
அவை ஒரு சர்வதேச வர்த்தக வலையமைப்பை உருவாக்க உதவின

347
00:22:31,640 --> 00:22:32,840
என்பது நமக்குத் தெரியும். 

348
00:22:32,960 --> 00:22:36,040
இது தொலைதூர
பயணம் செய்த 

349
00:22:36,040 --> 00:22:37,600
சிந்து வணிகர்களால் 

350
00:22:37,760 --> 00:22:40,200
மெசபடோமியாவில் கூட பயன்படுத்தப்பட்டது. 
சிந்து வணிகர்களுடனான மெசபடோமிய முத்திரை

351
00:22:40,280 --> 00:22:43,040
ஐராவதம் மகாதேவன், சிந்து எழுத்துமுறை நிபுணர்

352
00:22:43,120 --> 00:22:47,600
செல்வாக்கு மிக்க ஒவ்வொரு ஹரப்பனும் தன்னோடு எப்போதும் ஒரு முத்திரையை வைத்திருந்தான்,

353
00:22:49,880 --> 00:22:53,640
அநேகமாக அதைத் கழுத்தில்
மாட்டிக்கொண்டு

354
00:22:49,880 --> 00:22:53,640
தனது ஆவணங்களுக்குச்
சான்றளிக்கவோ,

355
00:22:53,640 --> 00:22:55,800
வணிகத்திற்கோ அல்லது பிரபுக்கள் 

356
00:22:55,960 --> 00:22:58,760
அவர்களது உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கோ பயன்படுத்தி இருக்கலாம். .

357
00:22:59,280 --> 00:23:02,240
அந்த வகையில், ஹரப்பா மற்றும்
மொகஞ்சோதாரோவின் முத்திரைகள் 

358
00:23:02,240 --> 00:23:03,120
சுமேரிய, அக்காடிய மற்றும் எகிப்திய நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட 

359
00:23:03,240 --> 00:23:07,960
முத்திரைகளில் இருந்து
வேறுபட்டவை அல்ல.

360
00:23:09,440 --> 00:23:12,400
முத்திரைகள் மென்மையான களிமண் கலவை மீது பதிக்கப்பட்டன.

361
00:23:15,280 --> 00:23:17,080
அவை ஒரு கயிற்றின் முடிச்சின்
மீதோ 

362
00:23:20,760 --> 00:23:22,680
அல்லது நேரடியாக பானை மீதோ வைக்கப்பட்டன.

363
00:23:25,640 --> 00:23:29,160
இந்த முத்திரையிடல், அதிகாரம் அல்லது உரிமையின் அடையாளமாக செயல்பட்டு, 

364
00:23:29,640 --> 00:23:34,080
அதற்கு பொறுப்பான அதிகாரி, வணிகர் அல்லது நிறுவனம் யார் என்பதை அடையாளப்படுத்தியது

365
00:23:38,080 --> 00:23:40,080
அந்த முத்திரைகளை நம்மால்
புரிந்துகொள்ள முடிந்தால், 

366
00:23:40,480 --> 00:23:42,760
இந்த மக்களைப் பற்றி நாம் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள முடியும். 

367
00:23:48,120 --> 00:23:51,120
இம்மொழி இன்றைய தென்னிந்திய மொழிகளின் 

368
00:23:51,440 --> 00:23:53,280
தொல் திராவிட மொழியாக
இருந்திருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

369
00:23:53,760 --> 00:23:57,760
உண்மையில், மொகஞ்சோதாரோவிற்கு அருகில் இன்றும் ஒரு திராவிட மொழி பேசப்படுகிறது.

370
00:23:58,560 --> 00:24:02,280
மொழியியல் தொல்லியல் ஆய்வுகள், அந்தப் பரந்த
பிராந்தியத்தில் இருந்த

371
00:24:02,280 --> 00:24:03,800
பிற மொழிகளும்

372
00:24:04,040 --> 00:24:07,200
பண்டைய சிந்து மொழிக்குத் தங்கள் 

373
00:24:07,520 --> 00:24:09,400
பங்களிப்பை செய்திருக்கும் என்கிறது. 

374
00:24:10,400 --> 00:24:13,360
உண்மையில், இங்கு அநேகமாகப் பல மொழிகள் பேசப்பட்டிருக்கலாம். 

375
00:24:13,720 --> 00:24:18,080
இன்றும் கூட மொகஞ்சோதாரோவில் ஒவ்வொரு நாளும் சிந்தி, சராக்கி

376
00:24:18,080 --> 00:24:19,760
பலூச்சி, உருது, ஆங்கிலம், பஞ்சாபி, பஷ்தூ எனப்

377
00:24:20,120 --> 00:24:23,240
பல மொழிகளைக் கேட்க முடியும். 

378
00:24:25,240 --> 00:24:27,640
தோற்றங்கள் மற்றும் மரபுகளின் கலவை.

379
00:24:28,480 --> 00:24:29,840
இது ஒற்றைப் பண்பாடு அல்ல.

380
00:24:30,120 --> 00:24:34,200
மாபெரும் பன்முகப்பண்பாடு. 

381
00:24:34,200 --> 00:24:35,600
இதனை 700 ஆண்டுகாலச் 

382
00:24:35,840 --> 00:24:37,320
சிந்துவெளிப் பண்பாடு சிறப்பாக விளக்குகிறது.

383
00:24:40,120 --> 00:24:42,920
இந்தப் பழம்பொருட்கள் அனைத்திலும் மிகவும்
மதிப்புமிக்கவை கல் முத்திரைகளே […]

384
00:24:43,000 --> 00:24:44,200
இவை மற்ற இந்தியக் கலை 

385
00:24:44,280 --> 00:24:46,200
எதிலிருந்தும் வேறுபட்டவை […]

386
00:24:46,440 --> 00:24:49,640
ஜான் மார்ஷல், தலைமை இயக்குநர்,
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை, 1924

387
00:24:51,800 --> 00:24:55,640
ஆளும் மேட்டுக்குடி வர்க்கத்தினரால் ஒரே எழுத்து மொழி பயன்படுத்தப்பட்டதா?

388
00:24:56,320 --> 00:24:58,160
மொகஞ்சோதாரோவிலிருந்து கிடைக்கும்
பெரும்பாலான முத்திரைகளில்  

389
00:24:58,160 --> 00:24:58,920
காணப்படும் ஒரு முக்கிய உருவம்

390
00:24:59,200 --> 00:25:03,160
ஒற்றைக் கொம்பு விலங்கு, 

391
00:25:03,160 --> 00:25:05,120
மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்ட உடலமைப்பைக் கொண்ட இந்த விலங்கு 

392
00:25:05,240 --> 00:25:06,640
இன்னும் புதிராகவே  உள்ளது.

393
00:25:09,000 --> 00:25:11,480
இந்த ஒற்றைக் கொம்பு விலங்கு 

394
00:25:11,680 --> 00:25:15,240
ஒரு இனக்குழு, கைவினைத் தொழில்கள் அல்லது பிராந்தியக் குழுக்களின் கலவையைக் குறிக்கப் பயன்பட்டிருக்கலாம். 

395
00:25:17,240 --> 00:25:20,400
பெரும்பாலான நேரங்களில், ஒற்றைக்கொம்பு விலங்கு சின்னம் ஒரு
தனித்துவமான தரத்துடன்

396
00:25:20,400 --> 00:25:21,440
காணப்படுகிறது.

397
00:25:22,080 --> 00:25:25,840
ஒற்றைக்கொம்பு விலங்குக்கு முன்பாக நீங்கள் காணும் புதிரார்ந்த அந்த

398
00:25:25,840 --> 00:25:27,240
வழிபாட்டுப் பொருள் 

399
00:25:27,400 --> 00:25:28,360
ஒரு வடிகட்டியாகும். 

400
00:25:28,720 --> 00:25:30,240
இது மூன்று பாகங்களால் ஆனது.

401
00:25:30,520 --> 00:25:34,840
ஒரு உருளை வடிவப் பாத்திரமும்,
கீழே துளைகளுடன் கூடிய ஒரு 

402
00:25:34,840 --> 00:25:36,800
அரைக்கோள வடிவ 

403
00:25:37,200 --> 00:25:41,200
அதாவது வடிகலனைப் போன்ற பாத்திரமும் உள்ளது.  இந்த மொத்தப் பாத்திரமும் ஒரு தண்டின் மீது பொருத்தப்பட்டுள்ளது.

404
00:25:41,840 --> 00:25:45,080
இந்த தண்டே இது ஊர்வலங்களில் எடுத்துச் செல்வதற்காகத் 

405
00:25:45,080 --> 00:25:46,840
தயாரிக்கப்பட்ட பொருள் என்பதைக் காட்டுகிறது.

406
00:25:47,120 --> 00:25:50,920
அது ஒரு தனிவகை வழிபாட்டு மரபு. 

407
00:25:50,920 --> 00:25:52,680
இதன் சடங்கு, பிரம்மை உண்டாக்கும் மருந்தை நசுக்கி 

408
00:25:53,160 --> 00:25:55,680
தாவரத்திலிருந்து பிரித்து எடுத்து 

409
00:25:55,680 --> 00:25:56,840
அருந்துவதை அடிப்படையாக் கொண்டது. 

410
00:25:59,800 --> 00:26:02,240
திரு. ஓமர் கான் அவர்களே, இது ஒரு
கோட்பாடே தவிர வேறொன்றுமில்லை என்பதை 

411
00:26:02,240 --> 00:26:03,480
நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

412
00:26:06,920 --> 00:26:09,560
மொகஞ்சோதாரோவில் உள்ள கதை முத்திரைகள் முக்கியமான புராணங்களைத்

413
00:26:09,560 --> 00:26:10,520
தன்னுள் கொண்டிருக்க வேண்டும்.

414
00:26:11,160 --> 00:26:16,720
அவற்றில் பல முத்திரைகளில் ஒருகாலத்தில் சிந்து வெளியில் ஏராளமாக்க காணப்பட்ட புலிகள் உள்ளன. 

415
00:26:19,040 --> 00:26:22,080
தோலவிராவில் கோட்டை நகரத்தின் நுழைவாயிலின் உச்சியில் ஒரு பெரிய அறிவிப்புப்
பலகை கண்டெடுக்கப்பட்டது.

416
00:26:22,200 --> 00:26:26,560
இது, ஆட்சியைக் குறிக்கும் ஒருவிதமான சின்னம் என்ற என் உள்ளுணர்வை வலுப்படுத்துகிறது. 

417
00:26:26,800 --> 00:26:30,280
அது காந்தி பயன்படுத்தியதைப்

418
00:26:30,760 --> 00:26:33,480
போன்ற ஒரு ராட்டையாகவும் 

419
00:26:33,480 --> 00:26:34,680
இருக்கலாம். 

420
00:26:37,480 --> 00:26:40,120
சிந்துப் பொருளாதாரத்தில் ஜவுளி ஒரு
முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் 

421
00:26:40,120 --> 00:26:41,160
என நாங்கள் சந்தேகிக்கிறோம்.

422
00:26:41,280 --> 00:26:43,240
மொகஞ்சோதாரோவின் ஜவுளி அச்சு

423
00:26:43,960 --> 00:26:48,040
இன்றைய இந்தியக் கொடியில் இதைவிட வித்தியாசமான  ஒரு பௌத்த சக்கரம் இடம்பெற்றுள்ளது.

424
00:26:51,320 --> 00:26:56,200
பொ.ஆ.மு. 1900 வாக்கில் இந்த
நாகரிகம் மறைந்துவிட்டதாகத் தெரிகிறது.

425
00:26:57,600 --> 00:27:00,280
பல சிலைகள் சிதைந்தோ அல்லது
தலையின்றியோ காணப்படுகின்றன.

426
00:27:00,560 --> 00:27:03,600
இது அரசியல் அல்லது மதக்
கலவரத்தைக் குறிக்கிறது.

427
00:27:04,760 --> 00:27:07,640
தொடக்ககாலத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்,
படையெடுத்து வந்த ஆரியர்களால்

428
00:27:07,640 --> 00:27:08,920
படுகொலைகள் நடந்ததாகக் கூறினர்.

429
00:27:09,440 --> 00:27:11,920
ஆனால், மொகஞ்சோதாரோவிலிருந்து கிடைத்த குறைந்த அளவிலான சான்றுகளும் கூட 

430
00:27:11,920 --> 00:27:13,080
பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளன.

431
00:27:13,760 --> 00:27:17,200
அது பெரும்பாலும் காலநிலை மாற்றம்,
உள்நாட்டுப் பிரச்சினைகள், நோய், 

432
00:27:17,200 --> 00:27:18,400
மற்றும் வர்த்தக வலையமைப்பின் சீர் குலைவு  போன்ற பல காரணங்களின்

433
00:27:18,560 --> 00:27:22,400
கலவையால் ஏற்பட்ட விளைவாக இருந்திருக்கலாம்.

434
00:27:24,480 --> 00:27:28,760
ஆனால், இவற்றில் எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது.  ஆனால் ஒற்றைக் கொம்பு விலங்கு மறைந்துவிட்டது என்பது மட்டும் நமக்குத் தெரியும்.

435
00:27:30,880 --> 00:27:33,920
அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு
எழுத்தும் அவ்வாறே மறைந்து போனது.

436
00:27:37,480 --> 00:27:40,680
இருப்பினும், மொகஞ்சோதாரோ கைவிடப்படவில்லை.

437
00:27:41,240 --> 00:27:43,920
ஜுகர் பண்பாட்டைச் சேர்ந்த
மக்கள் அங்கு குடியேறினர்

438
00:27:44,160 --> 00:27:47,320
அது பல நூற்றாண்டுகளாகத்
தொடர்ந்தது, பின்னர் பௌத்த ஆட்சி வந்தது. 

439
00:27:48,960 --> 00:27:51,320
தங்களின் நாகரிகம் முடிவுக்கு
வந்துகொண்டிருந்த வேளையில்,

440
00:27:51,480 --> 00:27:55,440
பண்டைய சிந்து மக்கள் தங்கள் முத்திரைகளை அரேபிய வளைகுடாவிற்குக் கொண்டு வந்தனர்.

441
00:27:56,320 --> 00:27:59,640
இன்று போதுமான நிதியுதவியுடன் அங்கு பல அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

442
00:28:00,320 --> 00:28:04,120
சிந்துவெளிக் குறியீடுகள் மற்றும் பிறமொழியைச் சேர்ந்த சின்னங்கள்  அடங்கிய இருமொழிக்
கல்வெட்டை 

443
00:28:04,120 --> 00:28:05,320
அவர்கள் அங்கு கண்டுபிடிப்பார்கள் 

444
00:28:05,480 --> 00:28:07,160
என்று நான் நம்புகிறேன். 

445
00:28:07,680 --> 00:28:10,240
சிந்துவெளி எழுத்து வடிவத்தைப் புரிந்துகொள்ள நமக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.

446
00:28:12,880 --> 00:28:15,200
எழுத்துகளைப் புரிந்துகொள்ள செயற்கை
நுண்ணறிவும் நமக்கு உதவும் 

447
00:28:15,200 --> 00:28:16,080
என நினைக்கிறேன்

448
00:28:16,440 --> 00:28:19,200
மறைக்குறியீட்டை விடுவிப்பவர்களுக்குப்
பரிசு அறிவிப்புகளும் வெளியாகியிருக்கிறது

449
00:28:19,640 --> 00:28:23,080
ஆனால், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைக் கொண்டு சோதித்துப் பார்ப்பதற்கு

450
00:28:23,080 --> 00:28:24,560
வசதியாக பொறிப்புகளின் பொது தரவுதளம் எதுவும் இல்லை. 

451
00:28:26,200 --> 00:28:29,680
நம்மிடம் உள்ளவற்றில் சிறந்தது,
1970-களில் வெளியான மகாதேவனுடையதுதான்.

452
00:28:30,400 --> 00:28:32,120
மிகவும் அர்ப்பணிப்புள்ள ஜெர்மானிய அறிஞர்,

453
00:28:32,280 --> 00:28:36,240
டாக்டர் ஆண்ட்ரியாஸ் ஃபுல்ஸ், இதைவிட பெரியதொரு தரவுதளத்தை வைத்திருக்கிறார். 

454
00:28:36,640 --> 00:28:38,840
ஆனால் அதற்குப் போதுமான வளங்கள்  முறையாக இல்லை.  

455
00:28:41,400 --> 00:28:44,160
பட்டியலிடப்படாத ஆயிரக்கணக்கான
பொறிப்புகள் அதில் உள்ளன.

456
00:28:45,640 --> 00:28:49,080
முன்னணி ஆய்வாளரான  84 வயதாகும் பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பார்போலாவின்

457
00:28:49,160 --> 00:28:52,960
ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல வாரிசுகள் இல்லை. 

458
00:29:05,880 --> 00:29:11,400
5. எதிர்காலம்

459
00:29:14,120 --> 00:29:16,840
இந்த இடத்தின் வழியே நடக்கும் போது 

460
00:29:17,000 --> 00:29:19,880
4,000 ஆண்டுகளுக்கு முந்தைய நகரத் தூசியைத் தான் நாம் சுவாசிக்கிறோம். 

461
00:29:24,120 --> 00:29:26,760
பண்டைய சிந்து பண்பாடுதான் 

462
00:29:26,840 --> 00:29:30,160
தெற்காசியாவின் தாய் நாகரிகம் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். 

463
00:29:30,560 --> 00:29:32,920
ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் இந்தப் பண்பாட்டை ஏற்றுக்கொள்வதற்குச் 

464
00:29:32,920 --> 00:29:33,880
சிறிது காலம் பிடித்தது.

465
00:29:34,800 --> 00:29:38,000
இந்த நாட்டை உருவாக்கியவர் எந்தவொரு
சிந்து நகரத்திற்கும் சென்றதில்லை.

466
00:29:38,640 --> 00:29:42,000
பிரிவினைக்கு முன்பு சமஸ்கிருத அறிஞராக
இருந்து 

467
00:29:42,000 --> 00:29:43,440
பின்னர் முன்னணி அகழ்வாராய்ச்சியாளரான 

468
00:29:43,720 --> 00:29:46,040
எனது மறைந்த நண்பர் டாக்டர் டானி இவர்.

469
00:29:46,920 --> 00:29:50,160
இன்று, சிந்து நாகரிகத்தைப் பொறுத்தவரை,

470
00:29:50,800 --> 00:29:54,840
இது பாகிஸ்தானின் பண்பாடு மற்றும்
வரலாற்றுப் பாரம்பரியத்தின்

471
00:29:54,840 --> 00:29:55,920
ஒரு பகுதியாகும்.

472
00:29:56,080 --> 00:29:57,800
பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி

473
00:29:57,880 --> 00:30:03,000
இன்றைய பாகிஸ்தானில், சிந்துவெளி தொல்லியல்
ஒரு பெருமைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

474
00:30:04,160 --> 00:30:06,240
சிந்து மற்றும் பஞ்சாப் அரசாங்கங்கள்

475
00:30:06,320 --> 00:30:11,040
பாதுகாப்பு மற்றும் அகழ்வாராய்ச்சிக்காக
மேலும் மேலும் நிதி ஒதுக்கீடு செய்து  வருகின்றனர்.

476
00:30:11,160 --> 00:30:15,920
பராமரிப்பைக் காட்சிப்படுத்துதல்:
மொகஞ்சோதாரோவின் சுடப்படாத களிமண் செங்கல்

477
00:30:19,000 --> 00:30:22,040
இதற்கு முன் நாங்கள் இங்கு
பாகிஸ்தானியர்களைப் பார்த்ததில்லை.

478
00:30:22,720 --> 00:30:24,000
முகமது இல்யாஸ், அகழ்வாராய்ச்சிப் பணியாளர்:

479
00:30:24,000 --> 00:30:24,600
பாகிஸ்தானியர்கள்
மொகஞ்சோதாரோவிற்கு வரவில்லை.

480
00:30:24,800 --> 00:30:26,480
பெரும்பாலும் ஜப்பானியர்களும் 

481
00:30:26,640 --> 00:30:27,760
பிற வெளிநாட்டினருமே வந்தனர்.

482
00:30:29,120 --> 00:30:31,920
அதனால் நாங்கள், "பாகிஸ்தானியர்கள்
ஏன் வருவதில்லை?" என்று கேட்டோம்.

483
00:30:32,160 --> 00:30:33,760
அவர்கள் இதன் மதிப்பை உணரவில்லை.

484
00:30:33,880 --> 00:30:38,320
பின்னர் படிப்படியாக பாகிஸ்தானியர்களின்
எண்ணிக்கை அதிகரித்தது.

485
00:30:38,840 --> 00:30:41,360
இப்போது, வெளிநாட்டினர் குறைவாகவும் 
பாகிஸ்தானியர்கள் அதிகமாகவும் உள்ளனர்.

486
00:30:43,600 --> 00:30:46,160
பிரிவினையின் முரண்பாடான விளைவு
என்னவென்றால், மிகவும்

487
00:30:46,160 --> 00:30:47,440
பிரபலமான சிந்து நகரங்கள் எல்லாம் பாகிஸ்தானில் உள்ளன

488
00:30:47,520 --> 00:30:52,240
ஆனால், வளங்களும்
பெரிய ஆர்வமும் இந்தியாவில் உள்ளன.

489
00:30:53,880 --> 00:30:56,680
இர்ஷாத் அலி சோலாங்கி, சுற்றுலா
வழிகாட்டி: 

490
00:30:56,760 --> 00:30:58,120
பல இந்தியர்கள் மொகஞ்சோதாரோவைப் பார்வையிட ஆர்வமாக உள்ளனர்

491
00:30:58,320 --> 00:31:00,200
அவர்களால் விசா பெறமுடியாதால் என்னை

492
00:31:00,320 --> 00:31:02,520
வாட்ஸ்ஆப்-பில் தொடர்புகொள்கின்றனர். 

493
00:31:02,680 --> 00:31:04,880
நான் மொகஞ்சோதாரோவைச் சுற்றிக்காட்ட ஒரு காணொளிப்
பயணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்கின்றனர்.

494
00:31:05,240 --> 00:31:10,360
அதனால், நான் அவர்களுக்கு 2
மணி நேரம் மொகஞ்சோதாரோவை காணொளியில் சுற்றிக்காட்டுகிறேன். 

495
00:31:11,200 --> 00:31:12,240
துரதிர்ஷ்டவசமாக

496
00:31:12,480 --> 00:31:15,760
, சிறு சிறு துணுக்குகள் மட்டுமே உச்சபட்ச ராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த 

497
00:31:15,760 --> 00:31:16,720
எல்லையைக் கடந்து செல்ல முடியும்.

498
00:31:16,840 --> 00:31:20,720
திரையில் நீங்கள் ஒளியூட்டப்பட்ட இந்த 

499
00:31:20,760 --> 00:31:22,520
எல்லையின் விண்வெளிப் புகைப்படத்தை காணலாம்.

500
00:31:24,320 --> 00:31:31,080
இந்திய-பாகிஸ்தான் எல்லை @ வாகா/அட்டாரி

501
00:31:34,840 --> 00:31:36,920
சிந்து நாகரிகத்துடன் நேரடி மரபுரிமை கொண்டதாகக் கூறப்படும் 

502
00:31:37,000 --> 00:31:39,640
2 பில்லியன் மக்கள் இருந்தபோதிலும் 

503
00:31:40,200 --> 00:31:43,960
ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சிகளுக்கான
நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது.

504
00:31:44,120 --> 00:31:47,320
இதற்காகவென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்
துறை கூட  எங்கேயும்  இல்லை.

505
00:31:53,840 --> 00:31:57,680
நவீன இந்தியர்களுக்கு எழும் கேள்வி
என்னவென்றால்,

506
00:31:57,760 --> 00:32:03,040
மொகஞ்சோதாரோவுடனான ஆழமான தொடர்பு அங்கு வாழும் பாகிஸ்தானியர்களுடனான
ஒரு சிறந்த உறவாக மாறக்கூடுமா என்பதுதான். 

508
00:32:03,400 --> 00:32:05,280
சமகால பாகிஸ்தானியர்களுக்கோ,

509
00:32:12,160 --> 00:32:15,560
சில தசாப்தங்களாக மட்டுமே இருக்கும் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் 

510
00:32:15,680 --> 00:32:18,960
இந்தத் தொன்மையான கடந்த காலத்தை 

511
00:32:19,040 --> 00:32:22,840
ஏற்றுக்கொள்வது எப்படி என்பதே பிரச்சனையாக உள்ளது. 

512
00:32:19,040 --> 00:32:25,280
மேலும் பெரும்பான்மை முஸ்லிம் தேசிய சித்தாந்தத்துடன் அது முழுமையாக பொருந்தவில்லை என்பதும் ஒரு சிக்கல்.

513
00:32:30,800 --> 00:32:34,720
அநேகமாக, நாம் பண்டைய சிந்து நாகரிகத்தைத் 

514
00:32:34,960 --> 00:32:36,960
தனது விலைமதிப்பற்ற கூறுகளைத் தெற்காசியா மற்றும் அதைத்தாண்டி

515
00:32:37,040 --> 00:32:40,880
வெகு தூரம் சிதறவிட்டிருக்கும் ஒரு வெண்கல கால 

516
00:32:41,040 --> 00:32:46,120
சூப்பர்நோவாவாகக் கற்பனை செய்வதே சிறந்ததாக இருக்கும்.

517
00:32:46,680 --> 00:32:50,480
நீளமான சிந்துவெளி கார்னிலியன்
மணிகள்  மெசபடோமியாவில் பெரிதும் மதிக்கப்பட்டன.

518
00:32:56,960 --> 00:33:00,800
உண்மையில், தங்கம், கார்னிலியன் மற்றும்
லாபிஸ் ஆகியவற்றைக் கொண்ட

519
00:33:00,800 --> 00:33:02,640
சிந்து பாணி ஆபரணங்கள் 

520
00:33:02,800 --> 00:33:04,200
பண்டைய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்தன.

521
00:33:07,040 --> 00:33:12,120
பண்டைய சிந்துவெளி
சிந்தனைகள் எவ்வளவு தூரம் பரவின?

522
00:33:18,720 --> 00:33:21,920
1972-இல் நான் மொகஞ்சோதாரோவிற்கு
முதன்முறையாக சென்றபோதிருந்து 

523
00:33:18,720 --> 00:33:21,920
என்னோடு நிலைத்திருக்கும் ஒரு விஷயம்

524
00:33:22,000 --> 00:33:23,960
அது மிகவும் பழமையானதாகவும் 

525
00:33:24,720 --> 00:33:27,640
பாரம்பரியத்துடன் பின்னப்பட்டிருந்தாலும் மற்றவர்களை 

526
00:33:27,640 --> 00:33:29,480
திறந்த மனதுடன் வரவேற்பதாகவும் இருப்பதுதான். 

527
00:33:30,720 --> 00:33:33,320
ஷேக் ஜாவித் அலி சிந்தி
சுற்றுலா வழிகாட்டி - வயது 13

528
00:33:33,440 --> 00:33:35,320
எங்களைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

529
00:33:35,480 --> 00:33:37,920
அங்கே, உள்ள மூத்தகுடிமக்கள்
இந்தக் கதையைச் சொல்கிறார்கள்:

530
00:33:38,600 --> 00:33:42,440
மொகஞ்சோதாரோவுக்குள் ஒருவர்
குடியேற விரும்பி 

531
00:33:42,720 --> 00:33:44,320
தன் குடும்பத்துடன் வரும்போதெல்லாம்,

532
00:33:44,480 --> 00:33:46,040
ஷேக் ஜாவித் அலி சிந்தி, சுற்றுலா
வழிகாட்டி

533
00:33:46,040 --> 00:33:46,440
உள்ளூர் மக்களான வீட்டு உரிமையாளர்கள் 

534
00:33:46,560 --> 00:33:49,280
ஒவ்வொருவரும்
அவருக்கு பரிசாக 

535
00:33:50,040 --> 00:33:52,400
ஒரே ஒரு செங்கல்லைக் கொடுத்து வந்தனர்.

536
00:33:52,680 --> 00:33:55,160
இவ்வாறு, அவர் பல நூறு, 
ஆயிரக்கணக்கான செங்கல்களை 

537
00:33:55,280 --> 00:33:59,080
உள்ளூர் மக்களிடம் இருந்து சேகரித்தார். 

538
00:33:59,200 --> 00:34:05,200
இந்த வழியில் அவர் தன் வீட்டை மிகச்
சிறப்பாகக் கட்டினார். .

539
00:34:09,120 --> 00:34:11,560
ஒரு நகரத்திற்குப் புதிதாகக்
குடியேறுபவர்களைப் போலவே 

540
00:34:11,960 --> 00:34:13,880
செங்கல் பகிர்வு இன்றும் அதே
அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

541
00:34:14,240 --> 00:34:16,360
மூலக்கூறு பகுப்பாய்வு கருவிகள், 

542
00:34:16,640 --> 00:34:20,280
மரபணு  சோதனை, செயற்கை நுண்ணறிவு ஆகியவை முற்றிலும் புதிய ஆய்வுத்

543
00:34:16,640 --> 00:34:20,280
துறைகளைத் திறந்துவிடுகின்றன. 

544
00:34:22,520 --> 00:34:23,960
சரியான வளங்கள் மட்டும் இருந்தால்

545
00:34:24,280 --> 00:34:28,280
இனி வரும் ஆண்டுகளை இவை ஆராய்ச்சிக்கு மிகவும் உற்சாகமான காலகட்டமாக மாற்றக்கூடும். 

546
00:34:32,440 --> 00:34:35,800
பண்டைய சிந்து நாகரிகம் எதைப்
பற்றியது என்பது தொடர்பான 

547
00:34:36,000 --> 00:34:37,720
பெட்டி சற்றுமுன்தான் திறக்கப்பட்டுள்ளது.

548
00:34:38,680 --> 00:34:41,960
அது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் அதற்கப்பால் உள்ள பரந்த உலகத்தின் 

549
00:34:42,240 --> 00:34:44,040
வரலாற்றையே மாற்றி எழுதக்கூடும்.

550
00:35:02,240 --> 00:35:06,520
எழுத்து/இயக்கம்/ஒளிப்பதிவு:
ஓமர் கான்

551
00:35:06,600 --> 00:35:10,680
இணை எழுத்தாளர்/தொகுப்பாளர்/மோஷன்
கிராபிக்ஸ் 
ரிச்சர்ட் லெவியன்

552
00:35:10,760 --> 00:35:14,840
ஓவியங்கள் 
கைல் ஆரோன் கோலுப்

553
00:35:14,920 --> 00:35:19,000
3D அனிமேஷன்கள்/பட மேம்பாடு 
ராகுல் வர்மா

554
00:35:19,080 --> 00:35:23,280
கூகிள் மேப்ஸ் அனிமேஷன்கள்
யாஹ்யா ஜாவேத்